ஜூனியர் என்டிஆருடன் படப்பிடிப்பில் இணைந்த சைஃப் அலிகான்


ஜூனியர் என்டிஆருடன் படப்பிடிப்பில் இணைந்த சைஃப் அலிகான்
x

கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் என்டிஆர்30 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் தற்போது கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக என்டிஆர்30 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தை என்டிஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் சார்பில் சுதாகர் மிக்கிலினேனி மற்றும் ஹரிகிருஷ்ணா கே தயாரிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சைஃப் அலிகான் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story