கோடாரியைக் கொண்டு வெறித்தனமாக வெட்டும் சஞ்சய் தத்.. மிரளும் ரசிகர்கள்


கோடாரியைக் கொண்டு வெறித்தனமாக வெட்டும் சஞ்சய் தத்.. மிரளும் ரசிகர்கள்
x

பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் சஞ்சய்தத். இவர் தற்போது 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டின் பிரபல நடிகராக வலம் வருபவர் சஞ்சய் தத். நட்சத்திர தம்பதிகளான சுனில் தத் மற்றும் நர்கீஸ் தத் என்பவரின் மகனான இவர் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானார். பின்னர், 1981-ஆம் ஆண்டு வெளியான 'ராக்கி' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.

100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் சஞ்சய் தத் பாலிவுட்டில் பல ஹீரோக்களுக்கு டப் கொடுப்பவராக உள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எப்' இரண்டாம் பாகத்தில் இவர் ஏற்று நடித்திருந்த வில்லன் கதாபாத்திரமான ஆதிரா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சஞ்சய் தத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வீடியோவில், சஞ்சய் தத் வெறித்தனமாக மரக்கட்டை ஒன்றை வெட்டுகிறார். இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், மரத்தை வெட்டுவது சிறந்த உடற்பயிற்சி. உடலின் மேற்பகுதிக்கான உடற்பயிற்சி. இதை முயற்சி செய்து பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story