புஷ்பா பட நடிகருடன் இணைந்த செல்வராகவன்


புஷ்பா பட நடிகருடன் இணைந்த செல்வராகவன்
x

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் செல்வராகவன் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அறிவிப்பை சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்துள்ளார். அதன்படி புஷ்பா பட நடிகர் சுனில் மற்றும் நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த படத்தில் செல்வராகவன் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குனர் ரங்கநாதன் இயக்கவுள்ளார். இதுகுறித்து செல்வராகவன், யோகிபாபு மற்றும் புஷ்பா பிரபலம் சுனிலுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story