15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் சுப்ரமணியபுரம்


15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வெளியாகும் சுப்ரமணியபுரம்
x

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'சுப்ரமணியபுரம்'. இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்துள்ளது.

சசிகுமார் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி 'சுப்ரமணியபுரம்' திரைப்படம் ரீ-ரிலீசாக உள்ளது. இதனை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


Next Story