சிங்கம் வெளியே வந்துதான ஆகணும்..! ரெஜினா பட டிரைலர் வைரல்
இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "ரெஜினா". இப்படத்தில், சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்களை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர். இப்படத்தை பவி கே. பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் 'ரெஜினா' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சிங்கம் வெளியே வந்துதான ஆகணும் போன்ற வசனங்கள் இடம்பெற்ற இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story