பூஜையுடன் தொடங்கியது தனுஷ் படத்தின் படப்பிடிப்பு


பூஜையுடன் தொடங்கியது தனுஷ் படத்தின் படப்பிடிப்பு
x

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

ராக்கி, சாணிக் காயிதம் படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். 'கேப்டன் மில்லர்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. வரலாற்று பாணியில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இதில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் இணைந்துள்ளார். மேலும், இப்படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதியும் 'வாத்தி' திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story