பீட்சா 3 படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு


பீட்சா 3 படத்தின் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
x

அஸ்வின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீட்சா 3. இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் பீட்சா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் பீட்சா 2 திரைப்படம் வெளியானது. தற்போது மங்காத்தா, மேகா, ஜீரோ, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்த அஸ்வின் நடிப்பில் பீட்சா 3 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் மோகன் கோவிந்த இயக்கியுள்ளார். இப்படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் காளி வெங்கட், பவித்ரா, கவுரவ் நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் மே 12ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் இப்படத்தின் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது. இந்நிலையில் பீட்சா 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளதாக வீடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story