இரண்டு முகம் கொண்ட ஹரிஷ் கல்யாண்.. இதுதான் விஷயம்


இரண்டு முகம் கொண்ட ஹரிஷ் கல்யாண்.. இதுதான் விஷயம்
x

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைகிறது.

பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. ராம்குமார் பாலகிருஷ்ணன் முன்பு 'பலூன்' படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நிறைவடைகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. ஹரிஷ் கல்யாணின் இரண்டு முகங்களை பிரதிபலிக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story