‘வேலையில்லா பட்டதாரி-2’வில் தனுசுடன் இணைகிறார், கஜோல்!


‘வேலையில்லா பட்டதாரி-2’வில் தனுசுடன் இணைகிறார், கஜோல்!
x
தினத்தந்தி 20 Dec 2016 12:47 PM IST (Updated: 20 Dec 2016 12:47 PM IST)
t-max-icont-min-icon

சமீபகால தமிழ் படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘வேலையில்லா பட்டதாரி.’ அதில் தனுஷ்-அமலாபால் ஜோடியாக நடித்து இருந்தார்கள். வேல்ராஜ் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ், தனுசின் வொண்டர்பார் ஆகிய 2 நிறுவனங்க

சமீபகால தமிழ் படங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம், ‘வேலையில்லா பட்டதாரி.’ அதில் தனுஷ்-அமலாபால் ஜோடியாக நடித்து இருந்தார்கள். வேல்ராஜ் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ், தனுசின் வொண்டர்பார் ஆகிய 2 நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.

தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த அமலாபால், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். மற்றும் விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தி பட உலகின் பிரபல கதாநாயகியான கஜோல், தனுசுடன் இணைந்து நடிக்கிறார்.

படத்தின் கதை-வசனத்தை தனுசே எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தை இயக்கிய சவுந்தர்யா டைரக்டு செய்கிறார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பை ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.
1 More update

Next Story