நகர்வலம்


நகர்வலம்
x
தினத்தந்தி 5 Jan 2017 2:37 PM IST (Updated: 5 Jan 2017 2:37 PM IST)
t-max-icont-min-icon

காதல்-திகிலுடன் ‘நகர்வலம்’ சென்னை நகரில், குடிநீர் வினியோகம் செய்யும் லாரி டிரைவருக்கு ஏற்படும் காதலையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் கருவாக வைத்து, ‘நகர்வலம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இதில், ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்த பாலாஜி கதாநாயகனாக ந

காதல்-திகிலுடன் ‘நகர்வலம்’

சென்னை நகரில், குடிநீர் வினியோகம் செய்யும் லாரி டிரைவருக்கு ஏற்படும் காதலையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் கருவாக வைத்து, ‘நகர்வலம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இதில், ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்த பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். தீட்சிதா, கதா நாயகியாக அறிமுகமாகிறார்.

யோகி பாபு, பாலசரவணன், மாரிமுத்து, நமோ நாராயணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சிறப்பு தோற்றமாக பசுபதி, ஒரே ஒரு பாடல் காட்சியில் தோன்றுகிறார். பவன் இசையமைக்க, எம்.நடராஜன் தயாரிப்பில், கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், மார்க்ஸ். படத்தின் பெரும்பகுதி காட்சிகள் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளன.

படத்தை பற்றி டைரக்டர் மார்க்ஸ் கூறும்போது, “இது, காதல்-நகைச்சுவை-திகில் கலந்த படம். படத்தின் முதல் பாதி காதலும், நகைச்சுவையுமாக இருக்கும். இரண்டாம் பாதி திகிலாக பயணிக்கும்” என்றார்.
1 More update

Next Story