மாணிக்


மாணிக்
x
தினத்தந்தி 5 Jan 2017 3:55 PM IST (Updated: 5 Jan 2017 3:55 PM IST)
t-max-icont-min-icon

மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு–எம்.ஆர்.பழனிகுமார், இசை–தருண்குமார், பாடல்கள்–மெர்ச்சி விஜய், படத்

மோஹிதா சினி டாக்கீஸ் தயாரிக்கும் படம் ‘மாணிக்’. இதில் கதாநாயகனாக மா.கா.பா.ஆனந்த் நடிக்கிறார். நாயகி சூசாகுமார். இவர்களுடன் பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு–எம்.ஆர்.பழனிகுமார், இசை–தருண்குமார், பாடல்கள்–மெர்ச்சி விஜய், படத்தொகுப்பு–கே.எம்.ரியாஸ், ஸ்டண்ட்–ராம்போவிமல், தயாரிப்பு– எம்.சுப்பிரமணியன், பி.வினோத். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்– மார்ட்டின். படம் பற்றி இவர் கூறும்போது....

“இந்த படம் முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகன் சென்னையில் வசிக்கும் திருமணம் ஆகாத இளைஞராக வருகிறார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இந்த இளைஞர்கள் மேற்கொள்ளும் பயணத்தை இந்த கதையில் சொல்லி இருக்கிறேன். இதில் மா.கா.பா.ஆனந்த் படிக்காத மேதையாக வருகிறார். நாயகி சூசாகுமார் புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மனோ பாலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.

‘மாணிக்’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடந்தது.
1 More update

Next Story