யாகன்


யாகன்
x
தினத்தந்தி 16 Jan 2017 1:04 PM IST (Updated: 16 Jan 2017 1:04 PM IST)
t-max-icont-min-icon

அப்பா-மகன் பாசத்தை சொல்லும், ‘யாகன்’ அப்பா-மகன் பாசத்தை சித்தரிக்கும் வகையில், ‘யாகன்’ என்ற படம் தயாராகி வருகிறது.

 அப்பாவாக பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ், மகனாக சஜன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். யோகராசா சின்னத்தம்பி தயாரிக்க, வினோத் தங்கவேலு கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:-

“ஒரு அப்பாவும், மகனும் எவ்வளவு அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்...அப்பாவும், மகனும் எவ்வளவு தூரம் அன்பாக இருக்க முடியும்? என்பதை இந்த படத்தில் காட்டுகிறோம். அப்பா-மகனுக்குமான நெருக்கத்தை, அன்பை, அன்னியோன்யத்தை இதற்கு மேல் யாராலும் வார்த்தைகளால் வடித்து விட முடியாது என்ற அளவில் நா.முத்துக்குமார் ஒரு பாடலை எழுதிக் கொடுத்தார். இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு மகனும் தன் தந்தையை நூறு மடங்கு மேலாக நேசிக்க தொடங்கி விடுவான். பாடலை ஒலிப்பதிவு செய்யும்போதே பலருக்கு கண்ணீர் வந்து விட்டது.

நிரோ பிரபாகரன் இசையமைத்து இருக்கிறார். மகேஷ் டி. ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதாநாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கிறார். படம், வேகமாக வளர்ந்து வருகிறது.”
1 More update

Next Story