ராஜா ரங்குஸ்கி


ராஜா ரங்குஸ்கி
x
தினத்தந்தி 20 Jan 2017 1:47 PM IST (Updated: 6 July 2017 3:37 PM IST)
t-max-icont-min-icon

‘பர்மா,’ ‘ஜாக்சன் துரை’ படங்களை டைரக்டு செய்த தரணிதரனும், ‘மெட்ரோ’ புகழ் ஷிரிசும் இணைந்து பணிபுரியும் படம், ‘ராஜா ரங்குஸ்கி.’ இது, ஒரு மர்ம படம்.

இதில், பூஜா தேவாரியா கதாநாயகியாக நடிக்க இருந்தார். தற்போது படத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதில் சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இதுபற்றி டைரக்டர் தரணிதரன் கூறியதாவது:-

“பூஜா தேவாரியா ஒரு அற்புதமான நடிகை. எதிர்பாராதவிதமாக அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், முழு ஓய்வு தேவைப்படுகிறது. நாங்கள் 2 மாதங்களில் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தை முடித்தாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை மனதில் கொண்டு, எங்கள் படத்தின் கதாநாயகியாக சாந்தினி தமிழரசனை ஒப்பந்தம் செய்து இருக்கிறோம்.

கடைசி நேரத்தில் எங்கள் படத்தின் கதாநாயகியான சாந்தினி தமிழரசனின் அசத்தலான நடிப்பு, எங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இன்னும் 2 மாத காலத்தில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.”

1 More update

Next Story