நாகேஷ் திரையரங்கம்

டைரக்டர் விக்ரமன் இயக்கிய ‘புது வசந்தம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சித்தாரா, சமீபகாலமாக அக்காள், அண்ணி வேடங்களில் நடித்து வந்தார்.
‘நாகேஷ் திரையரங்கம்’ படத்தில் ஆரியின் அம்மாவாக சித்தாரா!
இப்போது, அவர் அம்மா வேடத்துக்கு வந்து விட்டார். ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் அவர் கதாநாயகன் ஆரியின் அம்மாவாக நடிக்கிறார். கதையை நகர்த்தி செல்லும் முக்கிய வேடம், இது.
வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில், ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடிக்கிறார். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘இனிமே இப்படித்தான்,’ ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படங்களை அடுத்து நடிக்கும் படம், இது. படத்தில் அவர், ஒரு புத்தக கடையில் வேலை செய்பவராக வருகிறார்.
இவரும், ஆரியும் அந்த புத்தக கடையில் சந்தித்து காதல் வளர்ப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இசாக் டைரக்டு செய்கிறார். இண்டியா மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் சஸ்பென்ஸ், திகில், காதல், நகைச்சுவை கலந்த படமாக, ‘நாகேஷ் திரையரங்கம்’ தயாராகிறது.

Next Story