கோம்பே


கோம்பே
x
தினத்தந்தி 28 Feb 2017 12:19 PM IST (Updated: 28 Feb 2017 12:18 PM IST)
t-max-icont-min-icon

மலையாளத்தில் 3 படங்களை டைரக்டு செய்த ஹாபிஸ் இஸ்மாயில், ‘கோம்பே’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமாகிறார்.

தமிழுக்கு வந்த மலையாள டைரக்டர் ஹாபிஸ் இஸ்மாயில்

படத்தின் கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றுள்ளார். ‘கோம்பே’ படத்தை பற்றி இவர் கூறியதாவது:-

“தேங்காயில் இருந்து தேங்காயையும், நீரையும் எடுத்த பின், கீழே போடப்படும் கூட்டைத்தான் கோம்பே என்பார்கள். மனித வாழ்க்கையும் கோம்பேயை போன்றதுதான் என்பதே இந்த படத்தின் அடிநாதம். பணத்துக்காக கொலை செய்பவனின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். இதனால் ஏற்படும் விளைவுகளை கதை சித்தரிக்கிறது.

புதுமுகங்கள் சார்லஸ்-தீர்த்தா ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். அனூப் ராக்வெல், அபிஜித் ஜான்சன், டென்னிஸ் ஜோசப் ஆகிய மூவரும் இசையமைத்துள்ளனர். 4 நாட்களில் நடப்பது போல் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. தயாரிப்பு: ஹாரிஸ் இஸ்மாயில், பினு ஆபிரகாம், ஹாபிஸ் இஸ்மாயில்.”

1 More update

Next Story