இரவுக்கு ஆயிரம் கண்கள்


இரவுக்கு ஆயிரம் கண்கள்
x
தினத்தந்தி 1 March 2017 3:17 PM IST (Updated: 28 March 2017 1:04 PM IST)
t-max-icont-min-icon

‘வம்சம்’ படத்தில் தொடங்கி, ‘ஆறாது சினம்’ படம் வரை தரமான கதையம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர், அருள்நிதி.

அருள்நிதி நடிக்கும் புதிய படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’

இவர் அடுத்து, மு.மாறன் டைரக்டு செய்ய, டில்லிபாபு தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்துக்கு, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தை பற்றியும், படத்துக்கு ஏன் இந்த பெயர் சூட்டியிருக்கிறார்? என்பது பற்றியும் டைரக்டர் மாறன் விளக்கினார். அவர் சொல்கிறார்:-

“பொதுவாகவே இரவை விட, பகலுக்குத்தான் அதிக விழிகள் இருக்கிறது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், இரவுக்குத்தான் ஆயிரம் கண்கள் இருக்கிறது. எங்கள் படத்துக்கும், இரவுக்கும், இரவில் நடைபெறும் பல மர்மங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், நாங்கள் இந்த படத்துக்கு ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று பெயர் சூட்டியிருக்கிறோம்.

ஒரு பிரச்சினையில் இருந்து ஒரு சராசரி மனிதன் எப்படி வெளியே வருகிறான்? என்பதே படத்தின் ஒரு வரி கதை. ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக கொண்டு கதை நகரும். அருள்நிதியுடன் இணைந்து பணிபுரிவதை பெருமையாக கருதுகிறேன். மற்ற நடிகர்-நடிகைகள் விரைவில் உறுதி செய்யப்படுவார்கள். படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) 25-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெறும்.”

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அருள்நிதி ஜோடி, மகிமா நம்பியார்


தரமான கதையம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி அடுத்து, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் டில்லிபாபு தயாரிக்கும் இந்த படத்தை மு.மாறன் டைரக்டு செய்கிறார்.

இது, ஒரு குற்ற பின்னணி கதை. இதில், அருள்நிதி ஜோடியாக மகிமா நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், ‘குற்றம்-23’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர். படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் சிங், இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர் ஆகிய இருவரும் பணிபுரிகிறார்கள்.

படத்தை பற்றி அதன் டைரக்டர் மு.மாறன் கூறியதாவது:-

“நடிப்புக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளும் நடிகர், அருள்நிதி. ஏறக்குறைய அதே குணங்கள் நிறைந்த ஒருவரைத்தான் எங்கள் படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்ய வேண்டும் என்று கருதி, நாங்கள் மகிமா நம்பியாரை ஒப்பந்தம் செய்து இருக்கிறோம். இந்த படத்தில் அவர் செவிலியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகன், கதாநாயகி இரு வரையும் சார்ந்து நகரும் கதை, இது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கிறோம்.”


1 More update

Next Story