யாதுமாகி நின்றாய்


யாதுமாகி நின்றாய்
x
தினத்தந்தி 3 March 2017 12:50 PM IST (Updated: 3 March 2017 12:49 PM IST)
t-max-icont-min-icon

மறைந்த நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம், ‘சார்லி சாப்ளின்,’ ‘ஸ்டைல்,’ ‘பரசுராம்,’ ‘விசில்,’ ‘விகடன்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

காயத்ரி ரகுராம் இயக்கி நடித்த ‘யாதுமாகி நின்றாய்’ காயத்ரி ரகுராம்

அதன் பிறகு நடன இயக்குனராக மாறிய அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஏராளமான படங்களுக்கு நடனம் அமைத்து வருகிறார்.

இதற்கிடையில், அவர் முதன் முதலாக ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்துக்கு, ‘யாதுமாகி நின்றாய்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். படத்தில் கதாநாயகியாக அவரே நடித்து இருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“இந்த படம், திரைத்துறையில் பணியாற்றும் நடன கலைஞர்களின் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை கருவாக கொண்டது. பெண்கள், வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி வாழ வேண்டும்? என்ற சமூக கருத்தையும் கூறியிருக்கிறோம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கவர்ச்சி துளி கூட இல்லை.

என்னுடன் புதுமுகங்கள் வசந்த், நிவாஸ், சிந்து கிருஷ்ணன், மகேஷ், அபிஷேக், லதா ஆகியோர் நடித்துள்ளனர். அஸ்வின் வினாயகமூர்த்தி இசையமைத்து இருக்கிறார். விஷ்ணு ராமசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எங்க அம்மா கிரிஜா ரகுராம் தயாரித்துள்ளார். படத்தில், மூன்று பாடல்கள். அதில், “புடவை நிலவே” என்ற பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார்” என்றார்.
1 More update

Next Story