‘உயிர்க்கொடி’


‘உயிர்க்கொடி’
x
தினத்தந்தி 17 March 2017 2:23 PM IST (Updated: 17 March 2017 2:23 PM IST)
t-max-icont-min-icon

அறிமுகமே இல்லாத 2 பேர்களை யாரோ மர்ம ஆசாமிகள் கடத்தி சென்று ஒரு இடத்தில் சிறை வைத்து விடுகிறார்கள். கடத்தப்பட்ட இருவரும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

 அப்போது அவர்களுக்குள் நிகழும் சம்பவங்களை கருவாக வைத்து, ‘உயிர்க்கொடி’ என்ற படம் தயாராகி இருக்கிறது.

கதாநாயகனாக பி.ஆர்.ரவி, கதாநாயகியாக அஞ்சனா நட்சத்திரா ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள். விக்னேஷ் பாஸ்கர் இசையமைக்க, கவிநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கதாநாயகனாக நடித்திருக்கும் பி.ஆர்.ரவி கதை- திரைக் கதை- வசனம்-பாடல்கள் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். ஜே.பி.அமல்ராஜ் தயாரித்துள்ளார்.
1 More update

Next Story