மாம்


மாம்
x
தினத்தந்தி 1 April 2017 1:41 PM IST (Updated: 1 April 2017 1:41 PM IST)
t-max-icont-min-icon

அழகாலும், ஆழமான நடிப்பாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வசீகரித்தவர், ஸ்ரீதேவி. பல நடிகைகளின் ‘ரோல் மாடல்’ ஆக திகழும் இவர்,

 தமிழ்-தெலுங்கு-இந்தியில் தயாராகிறது ஸ்ரீதேவி நடிக்கும் ‘மாம்’

இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டபின், தனது திரையுலக பயணத்துக்கு சிறிது காலம் ஓய்வு கொடுத்தார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்,’ ‘புலி’ ஆகிய படங்களின் மூலம் ஸ்ரீதேவி தனது நடிப்பை தொடர்ந்தார். தற்போது அவர், ‘மாம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். ரவி உதயவார் டைரக்டு செய்கிறார்.

ஸ்ரீதேவியுடன் அக்‌ஷய்கன்னா, நவா சுதீன், சித்திக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது. ஜூலை மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர திட்ட மிட்டு இருக்கிறார்கள்.
1 More update

Next Story