12-12-1950


12-12-1950
x
தினத்தந்தி 20 Jun 2017 5:18 PM IST (Updated: 20 Jun 2017 5:18 PM IST)
t-max-icont-min-icon

செல்வா இயக்கி நடித்துள்ள ‘12-12-1950’

செல்வா ‘ஆத்தா உன் கோவிலிலே’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் கதாநாயகனாக நடித்த செல்வா, ‘கோல்மால்’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், தற்போது அவர் ஒரு புதிய படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கி நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘12-12-1950’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:- “12-12-1950, ரஜினிகாந்தின் பிறந்த தேதி ஆகும். உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரஜினிகாந்த் ரசிகர்களில் நானும் ஒருவன்.

அவரது படங்களை ஒன்று விடாமல் பார்த்து வளர்ந்தவன். அவருடைய பிறந்த தேதி, ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஒரு தினம். அதையே என் படத்தின் ‘டைட்டில்’ ஆக வைத்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி, 12-12-1950 என்று பெயர் சூட்டியிருக்கிறேன். எனக்கு குங்பூ தெரியும். படத்தில், குங்பூ மாஸ்டராகவே வருகிறேன். என் மாணவர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரசாந்த் கிருபாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தம்பிராமய்யா, யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், டெல்லிகணேஷ், பொன்னம்பலம், ரிஷா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். எனக்கு ஜோடியாக அஸ்வினி நடித்துள்ளார். நகைச்சுவை, குடும்பப்பாசம், சண்டை காட்சிகள் என சென்னை நகர பின்னணியில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து இருக்கிறோம். படம் அடுத்த மாதம் (ஜூலை) திரைக்கு வரும்.”
1 More update

Next Story