96

விஜய் சேதுபதி- திரிஷா நடிக்கும் ‘96’ வனவிலங்கு புகைப்படக்காரரின் பசுமையான நினைவுகள்
விஜய் சேதுபதி- திரிஷா இருவரும் முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் படம், ‘96.’ இந்த படத்தை சி.பிரேம்குமார் டைரக்டு செய்கிறார். இவர், பசங்க, சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். ‘96’ படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.
ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை ஆகிய படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
“1996-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், வனவிலங்குகளை படம் பிடிக்கும் புகைப்படக்காரராக விஜய் சேதுபதி நடிக்கிறார். அவருடன் படித்த சினேகிதியாக திரிஷா வருகிறார். விஜய் சேதுபதியின் பசுமையான நினைவுகளில், திரைக்கதை நகரும். அவர் நடித்த படங்களிலேயே அதிக செலவில் உருவாகும் படம் இதுதான்.
படப்பிடிப்பு கடந்த 16-ந் தேதி அந்தமானில் தொடங்கி, 24-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. தொடர்ந்து கொல்கத்தா, ஜெய்ப்பூர், புதுச்சேரி, கும்பகோணம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைய இருக்கிறது.”
‘96’ படத்தின் பாடல் காட்சிகளுக்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் விஜய் சேதுபதி-திரிஷா
ஜெயம் ரவி-ஹன்சிகா நடித்த ‘ரோமியோ ஜூலியட்,’ விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ ஆகிய படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால், அடுத்து விஜய் சேதுபதியை வைத்து, ‘96’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். காளி வெங்கட், வினோதினி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
‘பசங்க,’ ‘சுந்தர பாண்டியன்,’ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.பிரேம்குமார், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய இடங்களில் நடைபெற்றது. விஜய் சேதுபதி-திரிஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகள் அந்தமான் மற்றும் குலுமனாலியில் படமாக்கப்பட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற இருக்கிறது.
1996-ம் வருடம் பள்ளி இறுதி வகுப்பு தேர்வின்போது சக மாணவியை கடைசியாக சந்தித்த ஒரு இளைஞன், நீண்ட பல வருடங்களுக்குப்பின் அவளை மீண்டும் சந்திக்கும்போது நடைபெறும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை.

Related Tags :
Next Story