143


143
x
தினத்தந்தி 4 July 2017 2:43 PM IST (Updated: 4 July 2017 2:43 PM IST)
t-max-icont-min-icon

“அமாவாசையில் பிறந்த கதாநாயகனுக்கும், பவுர்ணமியில் பிறந்த கதாநாயகிக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.

 இந்த காதல் வளர்ந்ததா, தேய்ந்ததா? என்பதை கருவாக வைத்து, ‘143’ என்ற படத்தை உருவாக்கி இருக்கிறோம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைகளின் சுருக்கமே 143” என்கிறார், படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடிக்கும் ரிஷி. படத்தை பற்றி இவர் மேலும் சொல்கிறார்:-

“இந்த படத்தின் கதாநாயகிகளாக பிரியங்கா, நட்சத்திரா ஆகிய இருவரும் அறிமுகமாகிறார்கள். கே.ஆர்.விஜயா, விஜயகுமார் ஆகிய இரண்டு பேரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கபிலன் வைரமுத்து, அறிவுமதி, சினேகன் ஆகிய 3 பேரும் பாடல்களை எழுத, விஜய் பாஸ்கர்
இசையமைக்கிறார். சதீஷ் சந்திரா பாலேட் தயாரிக்கிறார்.

சென்னை மற்றும் ஐதராபாத்தில் படம் வளர்ந்து இருக்கிறது.”

1 More update

Next Story