சண்டக்கோழி-2


சண்டக்கோழி-2
x
தினத்தந்தி 18 Aug 2017 4:06 PM IST (Updated: 18 Aug 2017 4:05 PM IST)
t-max-icont-min-icon

‘சண்டக்கோழி-2’ படத்தில் விஷால்-கீர்த்தி சுரேஷ்! விஷால், மீராஜாஸ்மின், ராஜ்கிரண் ஆகியோர் நடித்து, லிங்குசாமி டைரக்டு செய்த ‘சண்டக்கோழி’ படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இதைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம், ‘சண்டக்கோழி-2’ என்ற பெயரில் தயாராகிறது.

கதாநாயகனாக விஷால் நடிக்கிறார். கதாநாயகி மீராஜாஸ்மின் திருமணம் முடிந்து குடும்பம் நடத்த போய் விட்டதால், அவருக்கு பதில் வேறு ஒரு கதாநாயகியை தேடி வந்தார்கள். இப்போது இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இது, விஷால் நடிக்கும் 25-வது படம் ஆகும். அவருடன் ஒரு முக்கிய வேடத்தில் வரலட்சுமி நடிக்கிறார். அப்பா வேடத்தில் ராஜ்கிரண் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். லிங்குசாமி டைரக்டு செய்கிறார்.
படப்பிடிப்புக்காக சென்னை பின்னி மில்லில், 10 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமான ஒரு அரங்கு அமைக்கப் படுகிறது. அங்கு முக்கிய காட்சிகள் படமாக்கப் படுகின்றன.
1 More update

Next Story