இந்திரஜித்


இந்திரஜித்
x
தினத்தந்தி 24 Oct 2017 4:02 PM IST (Updated: 24 Oct 2017 4:02 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.தாணு தயாரிப்பில் கவுதம் கார்த்திக்குடன், ‘இந்திரஜித்’

பல வெற்றி படங்களை தயாரித்த எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ், ‘இந்திரஜித்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாரித்து இருக்கிறது. கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அஷிதா ஷெட்டி நடித்துள்ளார். எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு, கதை-திரைக் கதை- வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார். படத்தை பற்றி டைரக்டர் கலாபிரபு கூறியதாவது:-

“ஒரு புதையலை தேடி, சென்னையில் இருந்து கோவா செல்லும் ஒரு குழுவை பற்றிய கதை இது. புதையலை தேடி அலையும்போது அந்த குழுவினருக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் திரைக்கதை. அவர்கள் புதையலை கண்டுபிடித்தார்களா, இல்லையா? என்பது படத்தின் உச்சக்கட்ட காட்சி.

கவுதம் கார்த்திக்-அஷிதா ஷெட்டி ஜோடியுடன் சோனாரிகா, சுதான்சே பாண்டே, சச்சின் கரேக்கர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜேப்பி இசையமைத்துள்ளார்.

சென்னை, புதுச்சேரி, ஐதராபாத், கோவா மற்றும் கேரளாவில் படம் வளர்ந்து இருக்கிறது. அடுத்த மாதம் (நவம்பர்) படம் திரைக்கு வரும்.”
1 More update

Next Story