டிராபிக் ராமசாமி


டிராபிக் ராமசாமி
x
தினத்தந்தி 22 Nov 2017 12:43 PM IST (Updated: 22 Nov 2017 12:42 PM IST)
t-max-icont-min-icon

‘டிராபிக் ராமசாமி’ படத்தில் முக்கிய வேடத்தில், விஜய் ஆண்டனி ஒரு சமூக ஆர்வலராக நடிக்கிறார்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் -ரோகிணியுடன்

நாட்டில் நடக்கும் தவறுகளை எதிர்த்து தனி மனிதனாக நின்று போராடும் துணிச்சல் மிகுந்த மனிதர். இவருடைய வாழ்க்கையை கருவாக வைத்து, ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகிறது. இதில், கதைநாயகன் டிராபிக் ராமசாமியாக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனும், அவர் மனைவியாக ரோகிணியும் நடிக்கிறார்கள்.

கதாநாயகனாக ஆர்.கே.சுரேஷ், கதாநாயகியாக உபாஷனா ஆகிய இருவரும் நடிக்க, நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவை கலந்த நீதிபதியாக அம்பிகா நடிக்கிறார். மற்றும் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, ‘சின்னத்திரை’ புகழ் சேத்தன், மோகன்ராம், மதன்பாப் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி, கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அநியாயங்களை தட்டிக் கேட்கும் சமூக அக்கறை உள்ள இளைஞராக, ஒரு திரைப்பட நடிகராகவே அவர் தோன்றுகிறார்.
படத்தின் டைரக்டராக விஜய் விக்ரம் அறிமுகமாகிறார். இவர், புனாவில் தொழில்நுட்பம் படித்து விட்டு, 5 ஆண்டுகள் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி டைரக்டராக இருந்தவர். ‘ஹரஹர மகாதேவி’ புகழ் பாலமுரளி பாலு இசையமைக்கிறார். ஈரோடு மோகன் தயாரிக்கிறார்.
1 More update

Next Story