டிராபிக் ராமசாமி


டிராபிக் ராமசாமி
x
தினத்தந்தி 1 April 2018 11:03 PM IST (Updated: 1 April 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

‘டிராபிக் ராமசாமி’யாக நடித்தது ஏன்?-எஸ்.ஏ.சந்திரசேகரன்

‘டிராபிக் ராமசாமி’ என்கிற சமூகப் போராளியின் வாழ்க்கை, ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில், திரைப்படமாகி வருகிறது. இதில், டிராபிக் ராமசாமியாக டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்க, அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். விக்கி டைரக்டு செய்கிறார். இந்த படத்தில், டிராபிக் ராமசாமியாக நடித்த அனுபவம் பற்றி டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியதாவது:-

“நான் முதலில் டிராபிக் ராமசாமியை சாலைகளில் விதி மீறிய பேனர்களை கிழிப்பவர் என்று மட்டுமே நினைத்திருந்தேன். அவர் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள தொடங்கியதும் அவருக்கும், எனக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது தெரிந்தது. அவர் சட்டத்தை நிலைநிறுத்த போராடுபவர். நான், சட்டத்தை எதிர்த்து படம் எடுத்து இருக்கிறேன். அவரைப் போலவே நானும் எதிர்ப்புகளை மீறி காதல் திருமணம் செய்தவன்.

அவரைப் போலவே வயதை பற்றி கவலைப்படாமல், சோர்ந்து விடாமல் இயங்கி வருபவன். போகப்போக அவரில் என்னை காண ஆரம்பித்தேன். அவர் நிஜத்தில் செய்ததை எல்லாம் நான் படங்களில் செய்தது, மறக்க முடியாத அனுபவம். கற்பனை இல்லாமல், கண் முன் வாழும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடித்தது, எனக்கு புதிய அனுபவமாக இருந்தது” என்கிறார், எஸ்.ஏ.சந்திரசேகரன்.

‘டிராபிக் ராமசாமி’ படத்தில், விஜய் ஆண்டனி கவுரவ வேடத்தில் நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, மதன்பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, சேத்தன், அம்பிகா, கஸ்தூரி, ‘பசி’ சத்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘ஹரஹர மகாதேவி’ புகழ் பாலமுரளி பாலு இசையமைக்கிறார். கிரீன் சிக்னல் என்ற பட நிறுவனம் தயாரித்து வருகிறது.
1 More update

Next Story