‘யாளி’


‘யாளி’
x
தினத்தந்தி 8 May 2018 1:32 PM IST (Updated: 8 May 2018 1:32 PM IST)
t-max-icont-min-icon

‘யாளி’ படத்தின் மூலம் அக்‌ஷயா, டைரக்டர் ஆனார், படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதியிருப்பதுடன் கதாநாயகியாகவும் இவரே நடித்து இருக்கிறார்.

ஆர்யா நடித்த ‘கலாபக்காதலன்,’ விஜயகாந்த் நடித்த ‘எங்கள் ஆசான்,’ கலைஞர் கருணாநிதி கதை-வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர், அக்‌ஷயா. இவர், ‘யாளி’ என்ற படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதியிருப்பதுடன் கதாநாயகியாகவும் இவரே நடித்து இருக்கிறார்.

தமன், கதாநாயகனாக நடித்து இருக்கிறார். ஊர்வசி, மனோபாலா, புதுமுகம் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி கதாநாயகியும், டைரக்டருமான அக்‌ஷயா கூறுகிறார்:-

“காதலும், திகிலும் கலந்த படம், இது. மும்பை பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமான 3 கதாபாத்திரங்களை சுற்றி கதை நகரும். நாயகி அக்‌ஷயா, நாயகன் தமன் இருவரும் காதலர்கள். இவர்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு ஆசாமி, அக்‌ஷயாவை பின்தொடர்கிறார்.

இந்த நிலையில், மும்பையில் தொடர் கொலைகள் விழுகின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும், இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் என்ன தொடர்பு? என்பதே கதை. கவிஞர் வைரமுத்து, வி.லட்சுமி ஆகிய இருவரும் பாடல்களை எழுத, எஸ்.ஆர்.ராம் இசையமைத்து இருக்கிறார். பாலச்சந்தர் டி. தயாரித்துள்ளார். சென்னை, மும்பை, மலேசியா ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. பெண் இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் நானும் இணைந்திருப்பதில், மகிழ்ச்சி.”
1 More update

Next Story