பேய் எல்லாம் பாவம்


பேய் எல்லாம் பாவம்
x
தினத்தந்தி 11 May 2018 1:34 PM IST (Updated: 11 May 2018 1:34 PM IST)
t-max-icont-min-icon

மண் ஆசையால் மண்ணை தொலைத்த மனிதர்களையும், ஒரு வீட்டில் பேய் செய்யும் அட்டகாசங்களையும் கருவாக வைத்து, `பேய் எல்லாம் பாவம்' என்ற நகைச்சுவை-திகில் படம் தயாராகி இருக்கிறது.

பேய் படங்களுக்கு என ஒரு `பார்முலா,' தமிழ் சினிமாவில் இருக்கிறது. பேய் என்றால் இருட்டில் வரும். வெள்ளை உடை அணிந்து இருக்கும். இதுபோன்ற வழக்கமான பேய் பட பாணியில் இருந்து மாறுபட்டு, கலகலப்பாகவும், காட்சிக்கு காட்சி திருப்பங்களுடனும், இந்த பேய் படம் உருவாகி இருக்கிறது.

புதுமுகம் அரசு, கேரள அழகி டோனா சங்கர் ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். அப்புக்குட்டி முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். நவீன் ஷங்கர் இசையமைத்து இருக்கிறார். கதை-திரைக்கதை-வசனத்தை தவமணி பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். மலையாள பட உலகின் முன்னணி டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த தீபக் நாராயணன் டைரக்டு செய்திருக்கிறார். ஹன்ஸிபாய் தயாரித்துள்ளார்.

தமிழ்நாடு-கேரளா எல்லை பகுதியில் படம் வளர்ந்து இருக்கிறது. இறுதிக்கட்ட பணிகள் இப்போது நடைபெறுகின்றன. படம், அடுத்த மாதம் (ஜூன்) திரைக்கு வரும்.''

1 More update

Next Story