கஜினிகாந்த்


கஜினிகாந்த்
x
தினத்தந்தி 30 July 2018 7:10 PM IST (Updated: 30 July 2018 7:10 PM IST)
t-max-icont-min-icon

ஆர்யா-சாயிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

“சாயிஷா ‘வனமகன்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார். அதே சமயம் அதிரடியாக நடனம் ஆடி இருந்தார். எனவே, இந்த ‘கஜினிகாந்த்’ படத்தில் அவருடன் பாடலுக்கு நடனம் ஆட பயந்து கொண்டிருந்தேன்.  ஒரு வழியாக கஷ்டப்பட்டு ஆடினேன்.

இந்த படத்தில் சாயிஷா பிரமாதமாக நடனம் ஆடி இருக்கிறார். தமிழ் அவருக்கு தெரியாது. என்றாலும், தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு நடிப்பார். அந்த அளவுக்கு நடிப்பில் அக்கறை கொண்டவர்” என்றார்.
1 More update

Next Story