இம்சை அரசன் 24-ம் புலிகேசி


இம்சை அரசன் 24-ம் புலிகேசி
x
தினத்தந்தி 2 Aug 2018 10:53 PM IST (Updated: 2 Aug 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

11 வருடங்கள் கழித்து, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் தயாராகிறது. டைரக்டர் ஷங்கரின் எஸ்.பிக்சர்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்துக்காக
100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
டைரக்டர் ஷங்கர் தயாரிக்க, சிம்புதேவன் டைரக்‌ஷனில், வடிவேல் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி. இந்த படம், கடந்த 2006-ம் ஆண்டில் வெளிவந்தது.

இதில், வடிவேல் 3 வேடங்களில் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இரண்டாம் பாகத்தையும் டைரக்டு செய்கிறார்.
படப்பிடிப்புக்காக மிக பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதன் முதலாக ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இன்னொரு பாடல் காட்சியையும் அங்கேயே படமாக்க இருக்கிறார்கள். அதில், 100 வெளிநாட்டு நடன அழகிகள் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் வடிவேல் நடனம் ஆடும் காட்சியை படமாக்க உள்ளனர்.
1 More update

Next Story