வெண்ணிலா கபடி குழு-2

கபடி போட்டி பின்னணியில் தந்தை -மகன் பாச கதை 2009-ம் வருடம் சுசீந்திரன் டைரக்ஷனில், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம், ‘வெண்ணிலா கபடி குழு.’
‘வெண்ணிலா கபடி குழு ’ இந்த படத்தின் தொடர் பாகமாக, ‘வெண்ணிலா கபடி குழு-2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி இருக்கிறது. சுசீந்திரன் மூல கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்வசேகரன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார். இவர் கூறியதாவது:-
‘‘வெண்ணிலா கபடி குழு-2’ படத்தில் விக்ராந்த் சந்தோஷ் கதாநாயகனாகவும், அர்தனா பினு கதாநாயகியாகவும் நடிக்க, முக்கிய வேடத்தில் பசுபதி நடித்துள்ளார். சூரி, கஞ்சா கருப்பு, கிஷோர், ரவிமரியா ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். வி.செல்வகணேஷ் இசையமைத்துள்ளார்.
தென்காசி, குற்றாலம், விருதுநகர், பழனி, பொள்ளாச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. ஏ.பூங்காவனம், என்.ஆனந்த் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
கபடி போட்டி பின்னணியில், தந்தை-மகன் பாசத்தை சித்தரிக்கும் கதை, இது.’’

Related Tags :
Next Story