அலிபாபாவும் 40 குழந்தைகளும்


அலிபாபாவும் 40 குழந்தைகளும்
x
தினத்தந்தி 7 Dec 2018 9:10 PM IST (Updated: 7 Dec 2018 9:10 PM IST)
t-max-icont-min-icon

மாசாணி, ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஆகிய படங்களை இயக்கியவர், எல்.ஜி.ரவிச்சந்தர். இவர் இயக்கிய ‘நான் அவளை சந்தித்தபோது’ என்ற புதிய படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அடுத்து இவர், ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’ என்ற நகைச்சுவை படத்தை உருவாக்குகிறார்.

நகைச்சுவை விருந்தாக தயாராகிறது ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’

இந்த படத்தில், புதுமுகம் போஸ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். அப்புக்குட்டி, மனோபாலா, மயில்சாமி, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தேவதர்ஷினி ஆகியோருடன் 40 குழந்தைகளும் நடிக்கிறார்கள். இடியேட்ஸ் கிரியேட்டஸ் என்ற நிறுவனம் சார்பில் படம் தயாராகிறது.

படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்யும் ரவிச்சந்தர் கூறும்போது, ‘‘இந்த படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க இருக்கிறோம். உழைப்பே உயர்வு. உழைக்காமல் எவராலும் முன்னேற முடியாது என்ற தத்துவமே ‘அலிபாபாவும் 40 குழந்தைகளும்’ படத்தின் திரைக்கதை. ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம்’’ என்றார்.
1 More update

Next Story