தனிமை


தனிமை
x
தினத்தந்தி 18 Dec 2018 12:18 AM IST (Updated: 18 Dec 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை அகதியாக நடிக்கிறார் ‘தனிமை’யில், சோனியா அகர்வால் படம் "தனிமை" இதில், கர்ப்பமாக இருக்கும் இலங்கை அகதியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகமான சோனியா அகர்வால், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட ஒரு புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் பெயர், ‘தனிமை.’ இதில், கர்ப்பமாக இருக்கும் இலங்கை அகதியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார்.

படத்தில் கதாநாயகன் இல்லை. கஞ்சா கருப்பு, மோகன்ராம், டான்ஸ் மாஸ்டர் சாண்டி ஆகிய 3 பேரும் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். தினா இசையமைத்து இருக்கிறார். எஸ்.சுந்தரவல்லி தயாரித்துள்ளார். இணை தயாரிப்பு: அனிதா சுருதி.

மறந்தேன் மெய் மறந்தேன், சொல்லித்தரவா, அன்பா அழகா, காகித கப்பல் ஆகிய படங்களை இயக்கிய எஸ்.சிவராமன், இந்த படத்தை டைரக்டு செய்திருக்கிறார். படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றது. மலேசியா, சிங்கப்பூரில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
1 More update

Next Story