தர்மபிரபு


தர்மபிரபு
x
தினத்தந்தி 18 Dec 2018 12:56 AM IST (Updated: 18 Dec 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கதாநாயகன் ஆனார், யோகி பாபு படம் ‘தர்மபிரபு’ கதை, திரைக்கதைவசனம் எழுதி டைரக்டு செய்கிறார், முத்துகுமரன்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக பிரபலமான யோகி பாபு, ‘தர்மபிரபு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக மேக்னா நாயுடு நடிக்கிறார். யோகி பாபு, மேக்னா நாயுடு ஜோடியுடன் ராதாரவி, ரமேஷ் திலக், அழகம் பெருமாள், போஸ் வெங்கட், மனோபாலா, மொட்ட ராஜேந்திரன், ‘கும்கி’ அஸ்வின், சோனியா ஆகியோரும் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதைவசனம் எழுதி டைரக்டு செய்கிறார், முத்துகுமரன். பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

‘தர்மபிரபு’ படத்துக்காக, ஏவி.எம் ஸ்டூடியோ வில், ரூ.2 கோடி செலவில் எமலோகம் போன்ற பிரமாண்டமான அரங்கம் அமைக்கப் பட்டுள்ளது. 150 பேர்கள் இரவு பகலாக பணிபுரிந்து இந்த அரங்கை அமைத்து இருக்கிறார்கள். வருகிற வெள்ளிக்கிழமை முதல் படப்பிடிப்பு நடை பெறுகிறது.

படத்தை பற்றி தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் கூறும்போது, “இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். ராதாரவி எமதர்மனாகவும், அவருடைய மகனாக யோகி பாபுவும் நடிக்கிறார்கள். எமலோகத்துக்கும், பூலோகத் துக்கும் ஒரு பாதிப்பு ஏற்படு கிறது. அதை யோகி பாபு எப்படி சமாளித்து, எமலோக வாசிகளையும், பூலோகவாசி களையும் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகிறார்? என்பது கதை” என்றார்.
1 More update

Next Story