உணர்வுகள் தொடர்கதை


உணர்வுகள் தொடர்கதை
x
தினத்தந்தி 11 May 2019 10:56 PM IST (Updated: 11 May 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

ஒரு இளம் காதல் தம்பதியின் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்கள், நிர்ப்பந்தங்களை கருவாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்'' என்கிறார், `உணர்வுகள் தொடர்கதை' படத்தின் டைரக்டர் பாலுசர்மா.

`உணர்வுகள் தொடர்கதை' படத்தில் காதல் தம்பதியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்

``இன்றைய எந்திரத்தனமான பொருளாதார மயமாக்கப்பட்ட வாழ்க்கை முறை கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தையும், நிர்ப்பந்தத்தையும் ஒவ்வொருவருக்குள்ளும் திணிக்கிறது. அந்த வகையில், ஒரு இளம் காதல் தம்பதியின் வாழ்வில் நடக்கின்ற சம்பவங்கள், நிர்ப்பந்தங்களை கருவாக வைத்து படத்தை உருவாக்கி இருக்கிறோம்'' என்கிறார், `உணர்வுகள் தொடர்கதை' படத்தின் டைரக்டர் பாலுசர்மா. இவர் மேலும் சொல்கிறார்:-

``இது, ஒரு உணர்வுப்பூர்வமான படம். இந்த படத்தை பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தை நினைவூட்டும். திரைக்கதையும், காட்சிகளும் ரசிகர்களை கவரும் விதத்தில், ஜனரஞ்சகமாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

புதுமுகங்கள் ரிஷிகேஷ்-செர்லின் சேத் ஆகிய இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மேலும் பல புதுமுகங்களும் பங்கேற்றுள்ளனர். சமீர் பரத் ராம் தயாரித்துள்ளார்.''
1 More update

Next Story