ஜோதிகாவின் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நிகிலா விமல்!

ஜோதிகாவின் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார்கள். மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார்.
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில், அவருடன் மைத்துனர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இருவரும் அக்காள்-தம்பி வேடங்களில் நடிக்கிறார்கள்., படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இவர், கமல்ஹாசன் நடித்த `பாபநாசம்` படத்தை இயக்கியவர்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவாவில் படம் வளர்ந்தது. இப்போது, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
திகில், அதிரடி சண்டை காட்சிகள் கலந்து, குடும்ப உறவுகளின் மேன்மையை சித்தரிக்கும் படம், இது. சூரஜ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.
Related Tags :
Next Story






