சென்னை பழனி மார்ஸ்


சென்னை பழனி மார்ஸ்
x
தினத்தந்தி 26 May 2019 10:23 PM IST (Updated: 26 May 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

‘சென்னை பழனி மார்ஸ்’ விஜய் சேதுபதி சொந்த படம் படத்தின் முன்னோட்டம்.

விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி சொந்தமாக படம் தயாரித்து வருகிறார். இந்த பட நிறுவனம் சார்பில் தயாரான முதல் படம், ‘ஆரஞ்சு மிட்டாய்.’ இதன் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி, ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற பெயரில் ஒரு புதிய படம் தயாரிக்கிறார். ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜு, இந்த படத்தை டைரக்டு செய்கிறார். படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

“இது, ஒரு பயண கதை. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும், அதை நோக்கிய கனவும் நிச்சயம் இருக்கும். ஆனால் அந்த கனவுகளை உண்மையாக்கும் முயற்சியில் சிலர் பாதியில் தோற்றிருக்கலாம் அல்லது போராடிப் பார்த்து விட்டிருக்கலாம். சிலர் வெற்றியும் பெற்றிருக்கலாம்.

அப்படிப்பட்ட ஒரு அற்புத கனவை நகைச் சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.

படத்தின் திரைக்கதை-ஒளிப்பதிவு-படத்தொகுப்பு ஆகிய பணிகளையும் நானே ஏற்றுள்ளேன். தனக்கே உரிய நகைச்சுவை முத்திரையுடன், விஜய் சேதுபதி வசனம் எழுதியிருக்கிறார். புதுமுகங்கள் பிரவீண்ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்புமுழுவதும் முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் இப்போது நடை பெறுகின்றன.”
1 More update

Next Story