நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா


நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
x
தினத்தந்தி 6 July 2019 12:59 PM GMT (Updated: 6 July 2019 12:59 PM GMT)

சிவகார்த்திகேயன் தயாரிப்பில், கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் முன்னோட்டம்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இது குறித்து கூறும்போது, "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா காமெடி, எமோஷன் மற்றும் ஜாலியான தருணங்கள் கலந்த ஒரு கலவை.

கதாநாயகன் ரியோ, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், கதாநாயகி ஷிரின் காஞ்ச்வாலா, இவர்களுடன் நாஞ்சில் சம்பத் நடித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Next Story