100 சதவீதம் காதல்


100 சதவீதம் காதல்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:38 PM GMT (Updated: 4 Oct 2019 4:38 PM GMT)

சந்திரமவுலி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாகி இருக்கும் '100 சதவீதம் காதல்' முன்னோட்டம்.

நாகசைதன்யா - தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், '100 சதவீதம் லவ்.' இந்த படம் `100 சதவீதம் காதல்' என்ற பெயரில் தமிழில் உருவாகி இருக்கிறது.

சந்திரமவுலி எம்.எம். இயக்கியிருக்கியிருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் - ஷாலினி பாண்டே நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். நாசர், தம்பிராமய்யா, `தலைவாசல்' விஜய், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ்.ஆர். ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Next Story