நாடோடிகள் 2


நாடோடிகள் 2
x
தினத்தந்தி 27 Jan 2020 5:52 PM GMT (Updated: 27 Jan 2020 5:52 PM GMT)

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள்-2 படத்தின் முன்னோட்டம்.

கடந்த 2009-ஆம் ஆண்டு சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் `நாடோடிகள்-2' உருவாகி வருகிறது. இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார்.

இசை - ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு - ஏகாம்பரம்,  தயாரிப்பு - எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம் - சமுத்திரக்கனி.

Next Story