உடுக்கை


உடுக்கை
x
தினத்தந்தி 1 Feb 2020 4:53 AM IST (Updated: 1 Feb 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்த சஞ்சனா சிங், அடுத்ததாக கவர்ச்சியான வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் முன்னோட்டம்.

ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்தவர் சஞ்சனா சிங். இவர் அடுத்து நடிக்கும் படம் உடுக்கை. தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கும் கிரைம் திரில்லராக இந்த படம் உருவாகிறது.

படம் பற்றி இயக்குனர் எம்.ஆர்.பாலமித்ரன் கூறும்போது, ‘தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பல நன்மைகளை கொடுத்தாலும் சில ஆபத்துகளும் நமக்கு ஏற்பட்டுள்ளன. இதை புதுமையான அன்பு, அதிர்ச்சி, அதிரடி, திகில் கலந்த கதையாக உருவாக்கி இருக்கிறோம்.

ஆர்.சரவணன், எஸ்.விபின், என்பிஎம்.உமர், சோழாஸ் சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். விபின், உமர், சஞ்சனா சிங், அங்கிதா, லட்சுமி, வலினா, மொட்ட ராஜேந்திரன், மயில்சாமி நடிக்க, சொற்கோ பாடல்களை எழுதி இசை அமைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். 
1 More update

Next Story