சோழ நாட்டான்


சோழ நாட்டான்
x
தினத்தந்தி 1 Feb 2020 11:18 PM IST (Updated: 1 Feb 2020 11:18 PM IST)
t-max-icont-min-icon

‘களவாணி-2’ படத்தை தொடர்ந்து விமல், ‘சோழ நாட்டான்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கார்ரொன்யா கேத்ரின் நடிக்கிறார்.

‘சோழ நாட்டான்’ படத்தில் விமல் ஜோடியாக கார்ரொன்யா கேத்ரின்

இவர், ‘பங்காரு பாலராஜு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். தெலுங்கு பட உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சிறந்த நடிகை மற்றும் நடனத்துக்காக தேசிய விருது பெற்றவர். தமிழ் படத்தில் நடிப்பது பற்றி இவர் சொல்கிறார்:-

“எனக்கு தமிழ்நாடு மற்றும் தமிழ் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். டைரக்டர் கதை சொல்லும்போதே நான் இந்த படத்தில் நடிப்பது என்று முடிவு செய்து விட்டேன். நான்தான் நடிப்பேன் என்று கூறிவிட்டேன். இந்த படம் எனக்கு நல்ல வரவேற்பை தரும்... தமிழ் பட உலகில் சிறந்த கதாநாயகியாக வருவேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார், கார்ரொன்யா கேத்ரின்.

‘சோழ நாட்டான்’ படத்தை பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா டைரக்டு செய்கிறார். புதிய கதைக்களத்துடன் தொடங்க இருக்கும் இந்த படத்தை பாரிவள்ளல் தயாரிக்கிறார்.
1 More update

Next Story