சிண்ட்ரெல்லா


சிண்ட்ரெல்லா
x
தினத்தந்தி 2 Feb 2020 3:09 AM IST (Updated: 2 Feb 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

‘சிண்ட்ரெல்லா’ படம் “ராய்லட்சுமிக்கு உரிய இடத்தை பெற்று தரும்” டைரக்டர் சொல்கிறார் படத்திற்கான முன்னோட்டம்.

‘சி ண்ட்ரெல்லா’ என்ற பெயரில், ஆங்கிலத்தில் பல படங்கள் வந்துள்ளன. இந்த பெயரில் முதன்முதலாக ஒரு தமிழ் படம் உருவாகி இருக்கிறது. ராய் லட்சுமி பிரதான வேடம் ஏற்றுள்ளார். வினோ வெங்கடேஷ் டைரக்டு செய்து இருக்கிறார். பெங்களூரை சேர்ந்த இவர், எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்தவர். இவர் கூறியதாவது:-

இது, ஒரு பேய் படம்தான். ஆனால் பேய் படங்களுக்கு இங்கே போடப்பட்டுள்ள ஹைதர் காலத்து ‘பார்முலா’வில் இருந்து விலகி, அனைத்து அம்சங்களும் கலந்து ஒரு விறுவிறுப்பான படமாக தயாராகி இருக்கிறது. ராய் லட்சுமி ஒரு கவர்ச்சி நடிகை என்ற ‘இமேஜை’ உடைக்கும்.

அவருக்கு இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவருக்கு உரிய இடத்தை ‘சிண்ட்ரெல்லா’ பெற்று தரும். இதில் சாக்‌ஷி அகர்வால், வில்லியாக நடித்துள்ளார். வழக்கமான திகில் படங்களில் இருந்து விலகி, புதிய பாதையில் கதை பயணிக்கும். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது.”


1 More update

Next Story