இன்னிசை காதலன்


இன்னிசை காதலன்
x
தினத்தந்தி 11 Feb 2020 10:20 PM IST (Updated: 11 Feb 2020 10:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் பட உலகுக்கு பல வெற்றி படங்களை கொடுத்து, ‘சகலகலா வல்லவர்’ என்று அழைக்கப்படும் டைரக்டர், டி.ராஜேந்தர். இவர், பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில வருடங்களாக படங்கள் இயக்குவதை தவிர்த்து வந்தார்.

5 புதுமுகங்களுடன் டி.ராஜேந்தரின் ‘இன்னிசை காதலன்’

சமீபத்தில், சென்னை-காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு, அதன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து தமிழ் பட உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பற்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள வினியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறார். தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள வினியோகஸ்தர்களின் கூட்டமைப்புக்கு தலைவராக இவர் பொறுப்பேற்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

இந்த நிலையில், டி.ராஜேந்தர் அடுத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு அவர், ‘இன்னிசை காதலன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார். “இது, இசைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள படம். கதாநாயகனாக 2 புதுமுகங்களும், கதாநாயகி களாக 3 புதுமுகங்களும் அறிமுகமாகிறார்கள்.

இந்த படத்துக்காக, சென்னை போரூரில் உள்ள டி.ராஜேந்தர் தோட்டத்தில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் வேலைகள் நடைபெறுகின்றன. அங்கு விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக் கிறது.”
1 More update

Next Story