பூமி


பூமி
x
தினத்தந்தி 10 March 2020 10:22 PM IST (Updated: 10 March 2020 10:22 PM IST)
t-max-icont-min-icon

உழைப்பாளர் தினத்தில் ஜெயம் ரவி படம் "பூமி" நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். முன்னோட்டம் பார்க்கலாம்.

கடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. தொடர்ந்து ‘பூமி’ படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

‘பூமி’ ஜெயம் ரவிக்கு 25-வது படம். இந்த படத்தை லட்சுமண் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூமி படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.

விவசாயத்தை மையப்படுத்தி அதிரடி படமாக பூமி தயாராகி உள்ளது. விவசாயிகள் நடுவில் ஜெயம் ரவி நிற்பதுபோன்ற முதல் தோற்ற போஸ்டரை ஏற்கனவே படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். தற்போது புழுதி பறக்க ஜெயம் ரவி ஆவேசமாக நிற்பது போன்ற இன்னொரு தோற்றத்தையும் வெளியிட்டு படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, சதீஷ், ரோஷித் ரெட்டி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். அடுத்து மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.
1 More update

Next Story