பத்து தல

‘பத்து தல’ படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்தார், ப்ரியா பவானி சங்கர் சினிமா முன்னோட்டம்.
எஸ்.டி.ஆர். என்று பெயர் மாற்றம் செய்து கொண்ட சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘பத்து தல’ படத்தில் கதாநாயகியாக இணைந்து இருக்கிறார், ப்ரியா பவானி சங்கர். இதுபற்றி டைரக்டர் ஒபிலி என்.கிருஷ்ணா கூறியதாவது:-
“ப்ரியா பவானி சங்கர் ஏற்க இருக்கும் கதாபாத் திரம் வழக்கமான கதா நாயகிகளின் கதாபாத் திரம் போன்றது அல்ல. கதையில், மிக முக்கியமான பாத்திரம். அவர், கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்க இருக்கிறார். படத்தில் அவருக்கு தாசில்தார் வேடம். இது, தனித்தன்மை மிகுந்த பாத்திரம். கதையின் போக்கோடு ஓடிவிடாமல், ரசிகர்கள் ரசிக்கும்படி இருக்கும்.
மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். ‘சில்லுன்னு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை அடுத்து நான் டைரக்டு செய்யும் படம், இது. படப் பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது”.
Related Tags :
Next Story






