வேட்டை நாய்


வேட்டை நாய்
x
தினத்தந்தி 26 Feb 2021 6:38 AM IST (Updated: 26 Feb 2021 6:38 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்‌ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டை நாய் படத்தின் முன்னோட்டம்.

தாய் மூவீஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வேட்டை நாய்’. ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடித்துள்ளார். மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். 

படம் குறித்து இயக்குனர் எஸ்.ஜெய்சங்கர் கூறியதாவது: "படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு கடினமான முரடன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது.

அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார்? என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.? அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை என கூறியுள்ளார்.
1 More update

Next Story