சினிமா கனவுகள்


சினிமா கனவுகள்
x
தினத்தந்தி 25 March 2021 9:09 PM IST (Updated: 25 March 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

ஒரு இளைஞரின் ‘சினிமா கனவுகள் சினிமா முன்னோட்டம்.

“சினிமா டைரக்டராக வேண்டும் என்பது ஒரு இளைஞருக்கு நீண்ட கால கனவு. அதற்காக பல வருடங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய கனவு நனவாகும் நாளும் வந்தது. தனது ஊரில் நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக்கி ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னான். தயாரிப்பாளருக்கு கதை பிடித்து இருந்தது. உடனே படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

படம் முடிவடைந்து திரைக்கு வர தயாரான நிலையில், அந்த இளைஞர் மீது தயாரிப்பாளரின் மகளுக்கு காதல் வந்தது. அவளின் காதலை இளைஞர் ஏற்க மறுத்தார். உடனே தயாரிப்பாளரின் மகள் அதிரடியாக ஒரு நடவடிக்கையில் இறங்கினாள். அதைப்பார்த்து அந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.

இப்படி பல திருப்பங்களுடன், ‘சினிமா கனவுகள்’ படத்தை இயக்கியிருக்கிறேன்” என்கிறார், டைரக்டர் பிரபு ராமானுஜம். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. பகவதி பாலா, மீரா, ஸ்ரீஜா சரவணன், வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
1 More update

Next Story