செண்பக கோட்டை


செண்பக கோட்டை
x
தினத்தந்தி 17 Dec 2016 11:29 PM GMT (Updated: 17 Dec 2016 11:29 PM GMT)

கதாநாயகன்-கதாநாயகி: ஜெயராம்-ரம்யா கிருஷ்ணன் டைரக்‌ஷன்: தாமர கண்ணன் கதையின் கரு: பழிவாங்க துடிக்கும் அரண்மனை ஆவி சோழ மன்னன் காட்டுக்குள் வேடவ பெண் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து அரண்மனை ஒன்றை கட்டி அதில் தங்க வைக்கிறான். எதிரி நாட்டு வீரர்கள் சோழனின் படைகளை தோற்கடித்து மன்னனை சிறைபிடிக்க முன்னேறும்போது வேடவ பெ

கதாநாயகன்-கதாநாயகி: ஜெயராம்-ரம்யா கிருஷ்ணன்
டைரக்‌ஷன்: தாமர கண்ணன்

கதையின் கரு: பழிவாங்க துடிக்கும் அரண்மனை ஆவி

சோழ மன்னன் காட்டுக்குள் வேடவ பெண் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து அரண்மனை ஒன்றை கட்டி அதில் தங்க வைக்கிறான். எதிரி நாட்டு வீரர்கள் சோழனின் படைகளை தோற்கடித்து மன்னனை சிறைபிடிக்க முன்னேறும்போது வேடவ பெண் தற்கொலை செய்து ஆவியாக மாறி மன்னனை காப்பாற்றுகிறாள். அரண்மனை வாசலில் அந்த பெண்ணுக்கு சிலை வைத்து காட்டுவாசிகள் தெய்வமாக வழிபடுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு வேடவர்கள் வாரிசாக விதவை பெண் ரம்யா கிருஷ்ணன் அரண்மனை பொறுப்பை ஏற்கிறார். அவருக்கு ஒரு பெண்குழந்தையும் இருக்கிறது.

வில்லங்க நிலங்களை அபகரித்து குறுக்கு வழியில் சம்பாதிப்பவர் ஜெயராம். இவருக்கு மனைவியும் பெண் குழந்தையும் உள்ளனர். ரம்யாகிருஷ்ணனிடம் ஜெயராம் நல்லவராக நடித்து ஏமாற்றி தாலிகட்டி அரண்மனையை எழுதி வாங்கிக் கொண்டு பிறகு அவரை அங்கிருந்து விரட்டி விடுகிறார். அப்போது ரம்யா கிருஷ்ணனின் குழந்தை எதிர்பாராதவிதமாக அரண்மனைக்குள்ளேயே இறந்து போகிறது. அந்த குழந்தை ஆவியாகி ஜெயராமையும் அவர் மனைவி, மகளையும் பழிவாங்க துடிப்பதும் அதில் இருந்து அவர்கள் தப்பினார்களா என்பதும் மீதி கதை.

சோழமன்னன், அரண்மனை என்று சரித்திர பின்னணியில் எதிர்பார்ப்போடு படம் தொடங்குகிறது. அதன்பிறகு பாழடைந்த அரண்மனை அதை அபகரிக்கும் கூட்டம் என்று இந்த காலத்துக்கு கதை மாறுகிறது. ஜெயராம் மாறுபட்ட வில்லனாக மிரட்டுகிறார். அரண்மனையில் இருந்து ரம்யா கிருஷ்ணனை விரட்ட அவர் வகுக்கும் வியூகங்கள் பரபரக்க வைக்கின்றன. மனம் திருந்தி ரம்யா கிருஷ்ணனையும் குழந்தையையும் அவர் தேடி அலைவதும் ஆவியிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்ற தவிப்பதும் மனதில் நிற்கின்றன.

ரம்யாகிருஷ்ணன், அப்பாவித்தனம், தன்னிடம் அத்துமீறி நடப்பவனை தாவி குதித்து வெட்டி சாய்க்கும் ஆவேசம், பசியால் அழும் குழந்தைக்கு உணவு கொடுக்க முடியாத இயலாமை என்று பன்முக உணர்வுகளில் உயிர்ப்பு காட்டுகிறார். குழந்தைகள் அக்‌ஷரா, அஞ்சலீனா இருவரும் ஆவியாக செய்யும் சேட்டைகள் கிலி ஏற்படுத்துகின்றன. மந்திரவாதியாக வரும் ஓம்புரி அழுத்தம். சம்பத், நரேன், சுஜா நிவோதயா ஆகியோரும் உள்ளனர். பேய் கதையை திகிலும் விறுவிறுப்புமாய் நகர்த்துகிறார் இயக்குனர் தாமர கண்ணன். குரூரமான ஜெயராம் திடீரென திருந்துவது நம்பும்படி இல்லை. ரித்தேஷ் வேகா பின்னணி இசை பயமுறுத்துகிறது. ஜீத்து தாமோதர் கேமரா அடர்ந்த காட்டையும் பேய் அரண்மனையையும் கண்முன் நிறுத்துகிறது.

Next Story