விமர்சனம்
காத்திருப்போர் பட்டியல்

காத்திருப்போர் பட்டியல்
சச்சின் மணி நந்திதா பாலையா டி.ராஜசேகர் சீன் ரோல்டன் எம்.சுகுமார்
நந்திதா, சச்சின் மணி, மயில்சாமி, மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், அப்புக்குட்டி, சென்ராயன் என்று நிறைய சிரிப்பு பட்டாளத்தை வைத்து உருவாகியிருக்கும் படத்தின் விமர்சனம்.
Chennai
புதுச்சேரியில் வேலை இல்லாமல் நண்பன் அறையில் தங்கி இருக்கும் சச்சின் மணிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நந்திதாவுக்கும் மோதல் ஏற்பட்டு காதல் மலர்கிறது. திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். நந்திதாவின் தந்தை எதிர்க்கிறார். ஒரு கட்டத்தில் சச்சின் மணி சென்னை வரும்போது நந்திதாவுக்கு அவசர திருமண ஏற்பாடு நடக்கிறது. தன்னை அழைத்துச் செல்லும்படி சச்சின் மணிக்கு நந்திதா தகவல் சொல்கிறார்.

அப்போது சச்சின்மணி எதிர்பாராத சிக்கலில் மாட்டுகிறார். ரெயில் பெட்டியில் கிறுக்கியதாக தாம்பரம் ரெயில்வே போலீசார் பிடிக்கிறார்கள். மேலும் பலர் பல்வேறு குற்றங்கள் செய்ததாக பிடிபடுகிறார்கள். அனைவரையும் ரெயில் நிலையத்தில் உள்ள லாக்கப்பில் அடைத்து வைக்கின்றனர். காதலி திருமணத்தை தடுக்க சச்சின்மணி தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். அதற்கு சக கைதிகள் உதவ முன்வருகிறார்கள். சச்சின் மணி தப்பினாரா? காதலி நிலைமை என்ன ஆனது? என்பது கிளைமாக்ஸ்..

சச்சின் மணி துறுதுறுவென வருகிறார். நந்திதாவை காதலில் சிக்க வைக்க செய்யும் தந்திரங்கள் ரசனை. நந்திதா தந்தையை ஏமாற்றி கம்பெனியில் வேலைக்கு சேர்வதும் பிறகு தில்லுமுல்லு தெரிந்து விரட்டப்படுவதும் கலகலப்பு. ரெயில்வே போலீசாரிடம் பிடிபட்டதும் காதலி நிலை என்ன ஆகுமோ? என்ற தவிப்பை இயல்பாக காட்டுகிறார்.

நந்திதா வசீகரிக்கிறார். கிளைமாக்சில் ரெயில் முன் விழுந்து தற்கொலை செயவதற்காக ஓடி பதற வைக்கிறார். ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ் விறைப்பும் முறைப்பும் காட்டுகிறார். மயில்சாமி, மனோபாலா, நான் கடவுள் ராஜேந்திரன், அப்புக்குட்டி, சென்ராயன் என்று நிறைய சிரிப்பு பட்டாளத்தை வைத்து காதல், கலகலப்பு போலீஸ் துரத்தல் என்று காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் பாலையா டி.ராஜசேகர். பெரும்பகுதி கதை லாக்கப்பிலேயே முடங்குவதை தவிர்த்து இருந்தால் இன்னும் பேசப்பட்டு இருக்கும். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சுமார். சுகுமார் கேமரா புதுச்சேரியையும் ரெயில் நிலையை காட்சிகளையும் சிறப்பாக பதிவு செய்துள்ளது.

முன்னோட்டம்

விஸ்வரூபம்-2

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் `விஸ்வரூபம்-2'.

கஜினிகாந்த்

ஆர்யா-சாயிஷா ஜோடியாக நடிக்கும் படம் ‘கஜினிகாந்த்’. சந்தோஷ் பி.விஜயக்குமார் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். பாலமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

காட்டுப்பய சார் இந்த காளி

மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும், தொப்பி ஆகிய படங்களை இயக்கியவர் யுரேகா. அவர் தற்போது, காட்டுப்பய சார் இந்த காளி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் முன்னோட்டம்